LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா- மார்க்கம் மூத்தோர் சங்கத்தினரால் பாராட்டிக் கௌரவிக்கப்பெற்ற தமிழீழப் பெண்கள் உதைபந்தாட்டக் குழுவின் கனடிய வீராங்கனைகள்

Share

கடந்த யூன் மாதம் முதல்வாரத்தில் நோர்வே நாட்டில் நடைபெற்ற நாடற்றவர்களான சிறுபான்மையினங்கள் சார்ந்தவர்களுக்கான உலக உதைப்பந்தாட்டப் சுற்றுப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி அந்த போட்டியில் இரண்டாவது இடத்தைத் தட்டிக் கொண்ட தமிழீழப் பெண்கள் உதைபந்தாட்டக் குழுவில் அங்கம் வகிக்கும் ஐந்து கனடிய வீராங்கனைகளைக் கௌரவிக்கும் அழகிய நிகழ்வொன்றை கனடா- மார்க்கம் தமிழ் மூத்தோர் சங்கத்தினர் கடந்த 26-07-2024 வெள்ளிக்கிழமை மார்க்கம் நகரில் அமைந்துள்ள ஆர்மடேல் சன சமூக நிலைய மண்டபத்தில் நடத்தினர்.

சங்கத்தின் தலைவர் திரு சுந்தரலிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
CONIFA WOMEN’S WORLD FOOTBALL CUP – 2024 என்னும் பெயரில் நடைபெறும் உலக உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு சென்று பங்கு பற்றி வெற்றிவாகை சூடிய தமிழீழப் பெண்கள் அணியின் சார்பில் கனடிய வீராங்கனைகள் கலந்து கொண்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
எமது தாய் மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து , இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து,

நெதர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வாழும் தமிழ் ஈழத்தை
பூர்வீகமாகக்கொண்ட இளம் பெண் வீரங்;கனைக் கொண்டு இந்த தமிழ் ஈழப் பெண்கள் உதைபந்தாட்டக் அணி உருவாக்கப்பட்டிருந்தது. அனைத்து நாடுகளிலிருந்தும் சுமார் 22 தமிழ் உதைப்பந்தாட்ட வீராங்கனைகள் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவர்களில் கனடாவிலிருந்து உலகப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்வரும் ஐந்து உதைப்பந்தாட்ட வீராங்கனைகள் நோர்வேக்கு பயணம் செய்து அங்கு ஏனைய தமிழீழ வீராங்கனைகளோடு இணைந்து சுற்றுப் போட்டியில் பங்குபற்றி இறுதிப் போட்டிக்கு தெரிவாகினர்.1. பிரித்திகா ஐங்கரமூர்த்தி 2. மாயா சத்தியன் 3. ஓவியா சத்தியன் 4. பிரீதி சுரேஸ்குமார் 5. மெலனி சுரேஸ்குமார். ஆகியோரே அன்றைய தினம் பாராட்டப்பெற்றனர்.