தனுஷின் “ராயன்” ஆஸ்கர் நூலகத்திற்கு தேர்வான திரைக்கதை!
Share
தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமியின் நூலகத்தில் இடம்பெற தேர்வாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது உருவான திரைப்படம் ‘ராயன்’. இந்த திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தனுஷின் 50-வது படமாக உருவாகியுள்ள ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 26ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ‘ராயன்’ திரைப்படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமியின் நூலகத்தில் இடம் பெற தேர்வாகியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.