LOADING

Type to search

இந்திய அரசியல்

பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை.

Share

பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் காவல்துறை அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.

.     தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் கட்டட அனுமதி வழங்க, லட்சக்கணக்கில் அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் நகராட்சி அலுவலகத்தில் நேற்றிரவு 8 மணியில் இருந்து அதிகாலை 7:00 மணி வரை லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறை சோதனையில் ஈடுபட்டனர். காவல்துறை தலைவர் நந்தகோபால் தலைமையில், ஆய்வாளர்கள் அருண் பிரசாத், சரவணன், பத்மாவதி ஆகியோர் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொறியாளர் மனோகரனிடம் இருந்து ரூ.84 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். 

நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள இடத்திற்கு அனுமதி வழங்குவதற்காக இந்த பணத்தை லஞ்சமாக பெற்று மறைத்து வைத்தது தெரிய வந்துள்ளது. மேலும் கான்ட்ராக்டர் எடிசன் என்பவரிடம் இருந்தும் 66 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினரை கண்ட நகராட்சி ஆணையர் குமரனின் ஓட்டுநர் வெங்கடேஷன், நகராட்சி அலுவலகத்தின் காம்பவுண்டு சுவரில் இருந்து 8,000 ஆயிரம் ரூபாயை துாக்கி வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், ஆணையர் குமரன் அழுக்கு துணிகளுடன் மறைத்து ரூ.5 லட்சத்தை அவரது வீட்டிற்கு எடுத்து செல்லக் கூறியது தெரிய வந்துள்ளது. அந்த பணத்தையும் காவல்துறை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புதுறை, நகராட்சி ஆணையர் குமரன், உதவி பொறியாளர் மனோகரன், ஓட்டுநர் வெங்கடேசன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அனைவரின் வீடுகளிலும் சோதனை நடந்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.