LOADING

Type to search

உலக அரசியல்

பாகிஸ்தானில் ‘ஜெகநாதர் ரத யாத்திரை’

Share

பாகிஸ்தானில் ‘ஜெகன்நாதர் ரத யாத்திரை’ திருவிழா கொண்டாடப்பட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

‘ரத யாத்திரை’ என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். புரி கடற்கரை நகரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புரி ஜெகன்நாதர் கோயிலில் இந்த விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. கோயிலின் உற்சவர்களான ஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஆண்டுதோறும், தனித்தனியாக மூன்று ரதங்களில் புரி நகரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இந்நிலையில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தான் நாட்டில் ரத யாத்திரை திருவிழா கொண்டாடப்பட்டது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் கொண்டாடப்பட்ட இந்த திருவிழாவின் காணொளிகளை விகாஷ் என்ற இன்ஸ்டாகிராமர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த காணொளி பக்தர்கள் கூட்டம் கூட்டமாக பஜனை பாடுவதையும், தேரை வடம்பிடித்து இழுப்பதையும் காட்டுகிறது. பக்தர்களுக்கு தண்ணீரும் வழங்குகின்றனர். இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.