LOADING

Type to search

சினிமா

‘சர்தார் 2’ படத்தில் இணைந்த நடிகை ஆஷிகா ரங்கநாத்

Share

சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஆஷிகா ரங்கநாத். இவர் கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரேசி பாய்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இன்று நடிகை ஆஷிகா ரங்கநாத் தனது 28-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் நடிகை ஆஷிகா ரங்கநாத், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.