LOADING

Type to search

சினிமா

ஜெயிலர் 2…நெல்சன் சம்பளம் ரூ,60 கோடி?

Share

கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் நெல்சன். தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், விஜய் நடித்த பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தினை இயக்கி இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தார் நெல்சன். ஜெயிலர் திரைப்படம் ரூ.600 கோடி வசூலைக் கடந்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்திற்காக நெல்சன் ரூ.22 கோடி சம்பளமாகப் பெற்றதாக சொல்லப்படுகிறது. முதல் படமான கோலமாவு கோகிலா படம் வெளியாவதற்கு முன்பு நெல்சன் சிலம்பரசன் நடித்த மன்னன் படத்தை இயக்கினார். பல்வேறு காரணங்களால் இந்தப் படம் வெளியாகாமல் போனது. ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இப்படத்திற்காக நெல்சனுக்கு ரூ.60 கோடி சம்பளம் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.