LOADING

Type to search

சினிமா

விமல் நடித்த `போகுமிடம் வெகுதூரமில்லை’ படம் 23 ஆம் தேதி வெளியீடு

Share

மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘போகும் இடம் வெகுதூரமில்லை’ படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விமல் அவசர ஊர்தி ஓட்டுநர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெருக்கூத்து கலைஞராக கருணாஸ் நடித்துள்ளார். அரசியல் புள்ளி ஒருவர் இறந்துவிட அவரது உடலை ஏற்றிக்கொண்டு அவர் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் களக்காடை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் விமல்.

அவசர ஊர்தியில் சென்று கொண்டிருக்கும் நிலையில் விமல் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மன அழுதத்தில் அரசியல் பிரமுகர் உடலை ஏற்றி சென்று கொண்டிருக்கும் விமல் ஆம்புலன்சை வழிமறித்து கருணாஸ் ஏறுகிறார். மன அழுத்தத்தில் சென்று கொண்டிருக்கும் விமலின் அருகில் அமர்ந்து கொண்ட கருணாஸ் வள வளவென பேசிக் கொண்டே வருகிறார். இது ஒருபுறமிருக்க மரணமடைந்த அரசியல் புள்ளிக்கு இரண்டு மனைவிகள். இருவருக்கும் ஆளுக்கொரு ஆண் பிள்ளைகள். இவர்களால் யார் தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்வது என்பது பற்றி குடும்பத்தில் தகராறு ஏற்படுகிறது. இதையொட்டி நடந்தது என்ன? என்பது தான் படத்தின் கதை. சில மாதங்களுக்கு முன் படத்தின் முன்னோட்டம் வெளியாகி வலைதளங்களில் வரவேற்பை பெற்றது. தற்பொழுது திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.