LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்க சிறுமியின் கால் சுறா மீன் தாக்கி துண்டிப்பு

Share

மத்திய அமெரிக்காவில் ஹாண்டுராஸ் நாடு அமைந்துள்ளது. கரீபியன் கடலையொட்டி அமைந்துள்ள இந்த நாட்டின் கடற்கரை பகுதிகளில் அதிக அளவிலான நீச்சல் பயிற்சிகளும், நீச்சல் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி அன்னாபென் கார்ல்சன், தனது பெற்றோருடன் ஹாண்டுராசில் உள்ள பெலிஸ் கடற்கரை பகுதிக்கு சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற நீச்சல் விளையாட்டிலும் அவர் கலந்து கொண்டார். அப்போது திடீரென அன்னாபென் கார்ல்சனை சுறா மீன் தாக்கியது. இதில் நிலைகுலைந்த அச்சிறுமி, கடினமாக போராடி சுறாவின் பிடியில் இருந்து மீண்டார். அவரை அங்கிருந்த பாதுகாவலர்கள் மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் சிறுமியின் வலது கால் துண்டானது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி அன்னாபென் கார்ல்சனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.