LOADING

Type to search

உலக அரசியல்

மோசமான வானிலையால் ஜப்பான் செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து

Share

ஜப்பானில் உள்ள நரிட்டா நகருக்கு டில்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டோக்கியோ வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையை தொடர்ந்து டில்லி-நரிட்டா விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மோசமான வானிலை எச்சரிக்கை காரணமாக டில்லி-நரிட்டா-டில்லி வழித்தடத்தில் ஏ.ஐ. 306 மற்றும் ஏ.ஐ. 307 ஆகிய விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. ஆகஸ்ட் 16-ந்தேதி டில்லி-நரிட்டா வழித்தட விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகள் மறுபயணம் மேற்கொள்வதற்கான டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும். மேலும் விமான சேவை ரத்து செய்யப்பட்டதற்கான முழு பணம் திரும்பி வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.