LOADING

Type to search

இலங்கை அரசியல்

கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகள் – அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்!

Share

வடக்கு மாகாணத்தை சேர்ந்த கிராமிய கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு மாகாண கடற்றொழில் சமாசங்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பு 18.08.2024 அன்றுஅமைச்சரின் யாழ்ப்பாண. அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகளை கையாளுதல் மற்றும் சீன அரசாங்கத்தினால் கடற்றொழிலாளர்களுக்காக வழங்கப்படும் உதவிகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

குறிப்பாக 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான அரிசி, 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான வலை, 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான முன் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டம் போன்றவற்றை சரியான முறையில் கடற்றொழிலை ஜுவனோபாயமாக கொண்ட கற்றொழிலாளர்களுக்கு பகிர்நதளித்தல் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் – வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் மக்களின் நலன்கருதி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுவதை உறுதி செய்வது அவசியம் என்றும் வலியுறுத்திய அமைச்சர், தீவகப்பகுதி கடற்றொழிலாளர்களின் எரிபொருள் குறிப்பாக மண்ணெண்ணை விநியோகம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையை தீர்ப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் விரைவில் இந்திய மீன்பிடியாளர்களின் எல்லைதாண்டிய சட்டவிரோத தொழில் நடவடிக்கை தொடர்பிலும் விரைவில் இந்திய இலங்கை தரப்பினருக்கிடையே பேச்சுக்கள் நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடற்றொழிலாளர் சமூகத்தின் நிலைப்பாடு தொடர்பிலும் அவதானம் செலுத்திய அமைச்சர் ஒரு தவறான பிரச்சாரத்தையும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வெளியிட்டார்

“மீண்டும் ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என அமைச்சர் சுட்டிக்காட்டியபோது சபையில் சலசலப்பு ஏற்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.