கனடா- ஸ்ரோவில் நகர் வாழ் மூத்த தமிழர்களால் கௌரவிக்கப்பெற்ற ஈழத்து தமிழ் பேசும் ஓட்ட வீராங்களை திருமதி அகிலத்திருநாயகி
Share
அண்மையில் கனடாவில் நடைபெற்ற ‘வென்மேரி’சர்வதேச சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவில் தனது கௌரவத்தைப் பெறுவதற்காக எமது தாயகத்தின் முள்ளியவளைக் கிராமத்திலிருந்து கனடாவிற்கு வந்திருக்கும் ஈழத்து தமிழ் பேசும் ஓட்ட வீராங்களை திருமதி அகிலத்திருநாயகி கனடா- ஸ்ரோவில் நகர் வாழ் மூத்த தமிழர்களால் கௌரவிக்கப்பெற்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை 18ம்திகதி இந்த வைபவம் இடம்பெற்றது.
சுமார் முப்பத்தைந்து ஸ்டோவில் தமிழ் முதியோர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 18, 2024 கார்னெல் சமூக மையப் பூங்காவில் கோடைகால ஒன்றுகூடலை நடத்தினார்கள். அந்த வைபவத்தில் ஓட்ட வீராங்களை திருமதி அகிலத்திருநாயகி கனடா- ஸ்ரோவில் நகர் வாழ் மூத்த தமிழர்களால் கௌரவிக்கப்பெற்றார்
இந்த விருந்தினர்களுக்குரிய . சிற்றுண்டி, காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. மதிய உணவை பொலிஸ் அதிகாரியும் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் சார்பில் மத்திய அரசிற்கான தேர்தலில் போட்டியிடவுள்ளவருமான வேட்பாளர் நிரன் ஜெயநேசன் ஏற்பாடு செய்தார்.
இந்நிகழ்விற்கு திருமதி அகிலா திருநாயகி மற்றும் நிரன் ஜெயநேசன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். திருமதி அகிலா திருநாயகி திருமதி ஞானேஸ் சிவா அவர்களால் கௌரவிக்கப்பட்டதுடன் உறுப்பினர்களின் அன்பளிப்பை ஸ்டோவில் தமிழ் மூத்தோர் அமைப்பின் தலைவர் தேவ சோமசுந்தரம் அவர்களினால் வழங்கப்பட்டது. திருமதி அகிலத் திருநாயகி-நிரன் ஜெயநேசனாலும் கௌரவிக்கப்பட்டார். திரு. டேவிட் ஏற்பாடு செய்த முதியோர் மற்றும் முதியோர் விளையாட்டை திருமதி அகிலத் திருநாயகி ரசித்தார். இந்நிகழ்வை மார்க்கம் தமிழ் முதியோர் சங்கத்தின் தலைவர் திருமதி ஞானேஸ் சிவா மற்றும் ஆர்.சுந்தரலிங்கம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்.
Arjune: Local Journalism Initiative Reporter-2