LOADING

Type to search

இந்திய அரசியல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு!

Share

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார்.  

     தமிழ்நாடு முதலமைச்சரை கலந்து கொண்ட நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார் என்ற நிலையில்  தமிழ்நாடு முதலமைச்சரை கமல்ஹாசன் சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று தமிழக அமைச்சர் ஏ.வ. வேலு எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியது என குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்துள்ளார். அவர் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை. நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கியவரும், வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வரலாற்று நாயகருக்கு சிறப்பான முறையில் நூற்றாண்டு விழா நடத்தி, முத்தாய்ப்பாக நாணயம் வெளியாக பெருமுயற்சி எடுத்த நண்பர், தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன். அவரது வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெற வாழ்த்தினேன். முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை.