LOADING

Type to search

இலங்கை அரசியல்

கச்சதீவில் காப்பாற்றப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள துணை தூதரகத்தில் ஒப்படைப்பு!

Share

பு.கஜிந்தன்

கச்சதீவுக்கு அண்மையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காப்பாற்றப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களும் 28-08-2024 அன்றையதினம் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நான்கு மீனவர்களுடன் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படகு ஒன்று 27-08-2024 அன்று தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினர் இரண்டு மீனவர்களை மீட்டுள்ளனர். அத்துடன் காணாமல் போன மற்ற இரண்டு மீனவர்களையும் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மீட்கப்பட்ட மீனவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமையன்று 27ம் திகதி நெடுந்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் 28ம் திகதி புதன்கிழமை குமுதினி படகு மூலம் குறிகட்டுவானுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரையும் பலாலி விமான நிலையமூடாக இந்தியாவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாண இந்திய துணை தூதரகம் முன்னெடுத்து வருகிறது.என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.