LOADING

Type to search

இந்திய அரசியல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதூர் அப்புவின் நண்பர் ரவுடி ராஜா கைது!

Share

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் புதூர் அப்புவின் நெருங்கிய நண்பரான ரவுடி ராஜா என்பவரை பெங்களூருவில் தனிப்படை காவல்துறை கைது செய்தனர்.

     பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அஸ்வத்தாமன், ரவுடி நாகேந்திரன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி உட்பட இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கூலிப்படையை சேர்ந்த திருவெங்கடம் காவல்துறையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சம்போ செந்தில் மற்றும் அவரது கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே மொட்டை கிருஷ்ணாவுடன் தொடர்பு கொண்டதாக பிரபல இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் தேடப்பட்டு வந்த ரவுடி திருவேங்கடம் துபாயில் இருந்து ஆகஸ்ட் 23-ம் தேதி சென்னை வந்தபோது விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் புதூர் அப்புவின் நெருங்கிய நண்பரும், ரவுடியுமான சென்னை வடபழனியை சேர்ந்த ராஜா (42) என்பவரை பெங்களூருவில் தனிப்படை காவல்துறை கைது செய்தனர். .