LOADING

Type to search

இந்திய அரசியல்

வயநாட்டில் சுற்றுலாத்துறையை மறுசீரமைக்க வேண்டும் – ராகுல் காந்தி

Share

நிலச்சரிவில் சிக்கிய வயநாட்டில் சுற்றுலாத்துறையை மறுசீரமைக்க ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

     சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வயநாட்டின் சுற்றுலா மறுமலர்ச்சிக்கு ஆதரவளிக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

மோசமான நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து வயநாடு படிப்படியாக மீண்டு வருகிறது. இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கும் நிலையில், அனைத்து சமூகங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த மக்கள் நிவாரணப் பணிகளில் ஒன்று சேர்வதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வயநாடு மக்களுக்கு பெரிதும் உதவும் ஒரு முக்கியமான அம்சத்தை நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். மழை நின்றவுடன், வயநாட்டில் சுற்றுலா துறையை மீட்டெடுத்து, மக்கள் வருகையை ஊக்குவிக்க ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்வது அவசியம். நிலச்சரிவு ஏற்பட்டது வயநாட்டில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே. முழு பிராந்தியமும் அல்ல. வயநாடு ஒரு பிரமிக்க வைக்கும் இடமாக உள்ளது, மேலும் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை அதன் அனைத்து இயற்கை வசீகரத்துடன் வரவேற்க விரைவில் தயாராக இருக்கும். கடந்த காலத்தில் செய்தது போல், அழகான வயநாட்டில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு ஆதரவாக மீண்டும் ஒன்று கூடுவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.