LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்காவில் பேருந்து விபத்து – 7 பேர் பலி

Share

அமெரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 7 பேர் பலியானார்கள். 37 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் மிஸ்ஸிஸ்ஸிப்பி மாகாணத்தின் விக்ஸ்பர்க் நகருக்கு கிழக்கே இருந்து பயணிகளை ஏற்றியபடி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

41 பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் அட்லாண்டாவில் இருந்து டல்லாஸ் நோக்கி சென்ற அந்த வர்த்தக பேருந்து, வாரன் கவுன்டி பகுதியில் பொவினா என்ற பகுதியருகே சென்றபோது திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் சகோதர சகோதரிகளான 6 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி உள்ளிட்ட 7 பேர் பலியானார்கள். 37 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் விக்ஸ்பர்க் மற்றும் ஜாக்சன் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.