LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழரசு கட்சி தனது வரலாற்று தவறை விரைவில் உணர்ந்து கொள்ளும் என்கிறார் பொ.ஐங்கர நேசன் .

Share

தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கியமை வரலாற்று தவறு என விரைவில் உணர்ந்து கொள்ளும் என பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் தெரிவித்தார்.

03-09-2024 செவ்வாய்க்கிழமை தமிழ் பொது வேட்பாளர் அரியனேந்திரனின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தென்னிலை ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கு தமிழரசு கட்சி ஆதரவு தெரிவித்து தீர்மானம் எடுத்திருக்கிறது.

அந்தத் தீர்மானம் சிலர் எடுத்தார்களா பலர் எடுத்தார்களா என்ற கேள்விகளுக்கு அப்பால் தமிழரசு கட்சியில் இந்த தீர்மானத்திற்கு எதிராக இருப்பவர்கள் வெளியில் வந்து பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட போது நாம் அவருக்கு ஆதரவு வழங்கினோம்.

அவர் தற்போது கூறுகிறார் நான் யுத்த குற்றவாளியாக இருந்தால் எனக்கு கடந்த தடவை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்திருக்க மாட்டார்கள் என கூறுகிறார்.

இப்போதுதான் புரிகிறது சரத் பொன்சேகாவை ஆதரித்தது பாரிய தவறு ஒன்றை தமிழ் மக்கள் செய்து விட்டார்கள் என எண்ணத் தோன்றுகிறது.

அதேபோல் தற்போது ஒற்றை ஆட்சியை வலியுறுத்தும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தமிழரசு கட்சி ஆதரவு வழங்கியதன் வரலாற்று தவறினை விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.

ஆகவே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்ல தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளையும் அவர்களின் கோரிக்கைகளை பிரதிபலிக்கும் தமிழ் பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் தமது வாக்குகளை வழங்கி பலப்படுத்த வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டார்