இந்திய உயரதிகாரி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம்
Share
நடராசா லோகதயாளன்
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்த இந்திய துணைத்தூதுவர் – மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியுள்ளார்
யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி 5ம் திகதி
வியாழக்கிழமைமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்தார்.
இதன் போது அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனை சந்தித்து மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார் என்று அம்மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் கூறியுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் பிரச்சினைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு அபிவிருத்தித் தேவைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரினால் யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவரிற்கு விபரிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், யாழ். இந்திய துணைதூதரகத்தின் இணைப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
எனினும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு என்னென்ன அபிவிருத்திகள் தேவை, அந்த மாவட்டத்திலிருக்கும் மக்கள் எவ்விதமான பிரச்சனைகள், சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பது இந்திய துணைத்தூதருக்கு எடுத்துக் கூறப்பட்டது என்பது தொடர்பில் உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை.