LOADING

Type to search

உலக அரசியல்

இந்தியாவுடன் எந்த பிரச்சினையும் இல்லை – மாலத்தீவு

Share

இந்தியாவுடன் எந்த பிரச்சினையும் தற்போது இல்லை என்று மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை வெளியேறும்படி, அதிபர் முகமது முய்சு உத்தரவிட்டதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. எங்கள் அரசின் துவக்கக் காலத்தில், இந்தியாவுடன் கசப்பான உறவு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியா – மாலத்தீவு இடையே இருந்த தவறான புரிதல்கள் தற்போது தீர்த்து வைக்கப்பட்டு விட்டன. சீனா மற்றும் இந்தியாவுடன் நாங்கள் நல்ல உறவைக் கொண்டுள்ளோம். இரு நாடுகளும் மாலத்தீவை ஆதரிக்கின்றன” என்றார். மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவில் கடந்த சில மாதங்களாக விரிசல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவு முன்னாள் அமைச்சர்கள், விமர்சித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தியர்கள் பலரும் தங்கள் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தனர். மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சுவும் இந்திய ராணுவத்தினரை வெளியேற உத்தரவிட்டார். அடுத்தடுத்து இந்தியா – மாலத்தீவு இடையேயான மனக்கசப்பு அதிகரித்த நிலையில், தற்போது மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர், எந்த பிரச்சினையும் இல்லை எனக் கூறியுள்ளார்.