LOADING

Type to search

இலங்கை அரசியல்

அம்பாறை மாவட்டத்தில் இதுவரை சுவரோட்டிகள் அகற்றப்படவில்லை- தேர்தல் கண்காணிப்பு பவரல் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் கந்தையா சத்தியநாதன்

Share

(கனகராசா சரவணன்)

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை தொகுதியில் 2 முறைப்பாடும் கல்முனை தொகுதியில் 3 முறைப்பாடுகளும் பொத்துவில் தொகுதியில 3 முறைப்பாடுகளும் அம்பாறை தொகுதியில் இருந்து 3 முறைப்பாடுகள் உட்பட 11 முறைப்பாடுகள் இதுவரை கிடைத்துள்ளது அதேவேளை தேர்தல் பிரச்சாரம் நேற்று இரவு 12 மணிவரை முடிவுற்றாலும் மாவட்டத்தில் இரண்டுமணிவரை சில பிரச்சார கூட்டம் இடம்பெற்றுள்ளதுடன் சுவரொட்டிகள் அகற்றப்படாத நிலை காணப்படுகின்றது என தேர்தல் கண்காணிப்பு பவரல் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் கந்தையா சத்தியநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பெவஸ்ஒப் மீடியா கற்கை நிலையத்தில் 19-09-2024 அன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாவட்டத்திலுள்ள 115 வாக்களிப்பு நிலையங்களில் 115 நிலைகொள் கண்காணிப்பாளர்களையும் 16 நடமாடும் கண்காணிப்பாளர்களையும் ஒரு தேர்தல் தொகுதிக்கு ஒருவாகன வீதம் 4; தொகுதியிலும் 4 வாகனங்களில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளதுடன் வாக்கு கணக்கெடுப்பு நிலையத்தில் 10 கண்காணிப்பாளர்கள்; கச்சேரியில் இருந்து வாக்கு எண்ண ஆரம்பிக்கும் போது இருந்து வாக்கு எண்ணிமுடியும்வரை கண்காணிப்பில் இருப்பார்கள்

அதேவேளை இந்த முறை இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணவேண்டிய தேவை ஏற்படும் அப்படியாயின் 15 மணித்தியாலம் தங்கியிருந்து கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அதேபோன்று நீண்டநாள் கண்காணிப்பாளர்கள் 4 பேர் நியமிக்கப்பட்டு அவர்கள் மறைமுகமாக கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்பதுடன் வேட்பாளர்களின் நிதி செலவு தொடர்பாக ஆராய்வதற்கு 3 பேரை நியமித்துள்ளோம்.

தேர்தல் பிரச்சாரம் நேற்று இரவு 12 மணிவரை முடிவுற்றாலும் மாவட்டத்தில் இரண்டுமணிவரை சில பிரச்சார கூட்டம் இடம்பெற்றுள்ளது இது தொடர்பாக தலைமைகாரியாலயத்துக்கு அறிவத்துள்ளோன் அதேபோன்று சுவரொட்டிகள் அகற்றப்படாதுள்ளது தொடர்பாக பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளேன்

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட இந்த வருடம் குறைவான முறைப்பாடு கிடைத்துள்ளது தற்போதை தேர்தல் சட்ட விதிகளின்படி வாக;குசாவடிகளுக்குள் முகவர்கள் ,கண்காணிப்பாளர்கள் மற்றும் அந்த வாக்குசாவடிகளில் பணியாற்றும் பொலிசார், அதிகாரிகளஈ உத்தியோகத்தர்கள் மட்டும்தான் உள்நுழையமுடியும் என்றார்.