LOADING

Type to search

உலக அரசியல்

ஜப்பானில் நிலநடுக்கம் – ரிக்டரில் 5.7 ஆக பதிவு

Share

ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவின் குஷிரோ கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கமானது 60 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் அப்பகுதி மக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினர். நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நான்கு பெரிய டெக்டோனிக் தட்டுகளின் மேல் ஜப்பான் நிலப்பரப்பு அமைந்துள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக்கங்களை அந்நாடு எதிர்கொள்கிறது. அவற்றில் பெரும்பாலானவை சிறியவை. மேம்பட்ட கட்டிட நுட்பங்கள் மற்றும் நன்கு நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நடைமுறைகள் காரணமாக பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டாலும் பாதிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.