LOADING

Type to search

சினிமா

இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற `லப்பர் பந்து’ படக்குழு

Share

பிரின்ஸ் பிக்சர்ஸ்’ தயாரித்த ‘லப்பர் பந்து’ படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பெரும்பாலானோர் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் படக்குழுவை அழைத்து பாராட்டினார். படத்தை பார்த்த வெற்றிமாறன், பா. ரஞ்சித் , கிரிக்கெட் வீரரான அஸ்வின் மற்றும் ஹர்பஜன் சிங் பாராட்டி அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். திரைப்படம் கடந்த வாரம் மட்டும் 3 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தற்பொழுது படக்குழு இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்தை பெற்றனர்.