LOADING

Type to search

இலங்கை அரசியல்

கோப்பாயில் சிறப்புற இடம்பெற்ற கலாசாலை நிறுவிய நாள் விழா நிகழ்வுகள்

Share

பு.கஜிந்தன்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 101 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கலாசாலை தின விழா 01.10.2024 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு கலாசாலை ரதிலக்க்ஷ்மி மண்டபத்தில் இடம்பெற்றது.

கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கலாசாலையின் பழைய மாணவரும் யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளருமாகிய ஜமுனா ராஜசீலன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

கலாசாலை நிறுவுவதற்கு நிலத்தை வழங்கிய சேர் பொன் இராமநாதனை கௌரவப்படுத்தும் வகையில் இராமநாதன் நினைவுப் பேருரை இடம்பெற;ற்து

‘ஆசிரிய கல்வியியலாளர்களின் தத்துவ ஆராய்ச்சிப் பட்டங்கள் தொடர்பில் மேற்கிளம்பும் சவால்களும் அவற்றை தாண்டிப் பயணித்தலும் ‘ என்ற பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல்துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா நினைவுப் பேருரை ஆற்றpனார். கலாசாலையில் உள்ள சிவன் ஆலயப் பிரதம குரு சிவசிறீ பா. செல்வசேனக் குருக்கள் ஆசியுழர வழங்கினார்.

நிகழ்வில் கலாசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் முன்னாள் அதிபர், விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.