LOADING

Type to search

உலக அரசியல்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் கண்டனம்

Share

இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை ஆஸ்திரேலியா கண்டிக்கிறது. இது மிகவும் ஆபத்தான விரிவாக்கம். ஆஸ்திரேலியாவும் உலக சமூகமும் தங்கள் கோரிக்கைகளில் தெளிவாக உள்ளன. பகைமை பொதுமக்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம். இஸ்ரேலில் உள்ள ஆஸ்திரேலியர்கள் உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும்” என்று அதில் அந்தோணி அல்பானீஸ் பதிவிட்டுள்ளார்.