துபாய் கார் ரேஸில் ‘அஜித் குமார் ரேஸிங்’அணி 3வது இடம்
Share
துபாய் கார் ரேஸில் அஜித்குமார் ஓட்டுநராக பங்கேற்பதில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்திருப்பதாக அணிக்குழு அறிவித்துள்ளது. குறிப்பிட்ட சில ரேஸில் மட்டுமே அஜித்குமார் பங்கேற்கபோவதாகவும், சில போட்டிகளில் இருந்து விலகுவதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கியதால் அஜித்தின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தடைபெற்ற போட்டியில் அஜித்குமாரின் அணி ரேஸில் 3வது இடம் பிடித்து அசத்தியது. மேலும் தொடரில் 23வது இடம் பிடித்திருந்தது. வெற்றிப்பெற்றதும் அஜித் இந்திய தேசியக்கொடியுடன் ரசிகர்களை சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். வெற்றிப்பெற்ற அணிகளை கவுரப்படுத்தும்போதும் இந்திய தேசியக்கொடியுடன் மேடையேறினார். கார் பந்தயத்தில் மூன்றாவது இடம்பிடித்த நடிகர் அஜித் குமார் ரேசிங் அணிக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.