LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஈழ நிசான் அறக்கட்டளையால் புங்குடுதீவு பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் 725 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பெற்றன!

Share

ஈழ நிசான் அறக்கடையால் 725 மாணவர்களுக்கு, 7 இலட்சத்து 75ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்றையதினம் (12) வழங்கி வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் வைத்து இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதனை தொடர்ந்து மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. தொடர்ந்து இறை வணக்கம், வரவேற்புரை, தலைமையுரை விருந்தினர்கள் உரை என்பன இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஈழ நிசான் அறக்கட்டளையின் செயலாளர் பு.கிரிதரன் தலைமை தாங்கிய இந்த நிகழ்வில்,
பிரதம விருந்தினராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனும், சிறப்பு விருந்தினராக தீவக வலய கல்விப் பணிப்பாளரும், கௌரவ விருந்தினராக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கீழ் உள்ள தீவக வலய பொலிஸ் பொறுப்பதிகாரி திரு.சேந்தனும் கலந்து சிறப்பித்ததுடன், மாணவர்கள், பெற்றோர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.