LOADING

Type to search

இந்திய அரசியல்

பொங்கல் கொண்டாட்டாம்: சொந்த ஊருக்கு 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம்

Share

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் கடந்த 3 நாட்களில் மட்டும் 6.40 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை நேற்று முதல் துவங்கியது. பொங்கலுக்காக வரும் (ஜன)14ம் தேதி முதல் 19ம் தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வோருக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் முன்பதிவு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. நேற்று (ஜன.12) மட்டும் தமிழகம் முழுவதும், ஒரே நாளில் சிறப்பு பேருந்துகளில் 2,17,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். கடந்த 3 நாட்களில் ஒட்டுமொத்தமாக 6.40 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். வழக்கமாக பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க சொந்த ஊர் செல்வதை மக்கள் விரும்புகின்றனர். இதனால் சொந்த ஊர் சென்ற பயணிகள் எண்ணிக்கை உச்சம் தொட்டு வருகிறது