LOADING

Type to search

சினிமா

குட் பேட் அக்லி – ஒடிடி உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்

Share

குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஒடிடி உரிமையை நெட்பிளஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தமிழ் உச்ச நடிகரான அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்தது. இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஒடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான  நெட்பிளஸ் ரூ.75 கோடிக்கு வாங்கியுள்ளது. இதன் மூலம்  குட் பேட் அக்லியின் படம் திரைக்கு வருவதற்கு முன்பாக டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.