LOADING

Type to search

உலக அரசியல்

ரஷியா அதிரடி தாக்குதல்.. உக்ரைனில் மின்சாரம் துண்டிப்பு

Share

உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை தொடங்கிய ரஷியா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. சமீப காலமாக உக்ரைனின் உள்கட்டமைப்புகளை ரஷியா தாக்குகிறது. அவ்வகையில், ரஷிய படைகள் உக்ரைனின் மின் உற்பத்தி மையங்கள் மற்றும் எரிசக்தி சேமிப்பு மையங்களை குறிவைத்து மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இதனால் பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை உக்ரைன் எரிசக்தி துறை மந்திரி ஹெர்மன் ஹலுசென்கோ தெரிவித்துள்ளார். உக்ரைன் மக்களை எதிரி (ரிஷியா) தொடர்ந்து பயமுறுத்துவதாகவும் அவர் கூறி உள்ளார். மக்கள் பாதுகாப்பாக , அந்தந்த பகுதிகளில் உள்ள தங்குமிடங்களில் தங்கியிருக்க வேண்டும் என்றும், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பதிவேற்றங்களை அறிந்து அதனை பின்பற்றவேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். கார்கிவ், சுமி, போல்டாவா, சபோரிஜியா, டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் கிரோவோஹ்ராட் ஆகிய பகுதிகளில், அரசு மின் நிறுவனமான உக்ரெனெர்கோ அவசரகால மின்வெட்டை அமல்படுத்தி உள்ளது.

ரஷியாவால் ஏவப்பட்ட பல ஏவுகணைகளை உக்ரைனின் விமானப்படை கண்டறிந்து, மக்களுக்கு உரிய பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.