‘இந்தியன் 3’ திரைப்படம் குறித்து ஷங்கர் பதிவேற்றம்
Share
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானது. கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. ‘இந்தியன் 2’ படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்தாலும், ‘இந்தியன் 3’ படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், பேட்டி ஒன்றில் இந்தியன் 3 படத்தின் பதிவேற்றத்தை ஷங்கர் பகிர்ந்தார். அப்போது அவர் கூறுகையில், ‘நிறைய விஎப்எக்ஸ் பணிகள் மீதமுள்ளன மற்றும் சில காட்சிகள் இன்னும் படமாக்க வேண்டியதுள்ளது. அதற்கு இன்னும் 6 மாதங்கள் தேவைப்படுக்கிறது’ என்றார்.