ஹாலிவுட் இயக்குநர் ‘டேவிட் லிஞ்ச்’ மரணம்
Share
ஹாலிவுட்டின் படைப்பாளியான டேவிட் லிஞ்ச் காலமானார். கடுமையான புகைப்பழக்கம் கொண்டவரான டேவிட் எம்பைசிமா எனப்படும் நாள்பட்ட நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று தனது 78 வயதில் உயிரிழந்துள்ளார். லிஞ்சின் குடும்பத்தினர் அவரது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிக்கை மூலம் அவரது மரணத்தை அறிவித்தனர். அந்த அறிக்கையில், ‘இப்போது அவர் எங்களுடன் இல்லாததால் உலகில் ஒரு பெரிய ஓட்டை உருவாகியுள்ளது. ஆனால், அவர் சொல்வது போல், உங்கள் கண்ணை டோனட்டின் மீது வைத்திருங்கள், ஓட்டை மீது அல்ல’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவரின் டுவின் பீக் தொடர் மூன்று கோல்டன் குளோப்ஸ், 2 எம்மிகள் மற்றும் அதன் இசைக்காக ஒரு கிராமி விருதையும் வென்றது. டேவிட் லின்ச் ‘புளூ வெல்வெட்’ படத்திற்காக ஆஸ்கர் பரிந்துரைக்கப்பட்டார். 1990-ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘வைல்ட் அட் ஹார்ட்’ படத்திற்காக, மதிப்புமிக்க பாம் டி’ஓர் விருதை வென்றார். மேலும் 2019ம் ஆண்டில் வாழ்நாள் சாதனையாளருக்கான அகாடமி விருதைப் பெற்றார். காலமான இயக்குநர் டேவிட் லின்ச்சின் மறைவுக்கு ஏராளமான ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.