LOADING

Type to search

சினிமா

“அசுரன்” படத்தில் கென் கருணாஸ் நடிக்க வேண்டாம்’னு சொன்னேன் – தனுஷ்

Share

கென் கருணாஸின் ‘யூத்’ படத்தின் வெளியீடு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்டு பேசியிருக்கும் தனுஷ், “கென் கருணாஸை முதல்ல நான் ‘அசுரன்’ படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ சூட்டிலத் தான் பார்த்தேன். பார்த்தவுடனே இவன் உருண்டையாக இருக்கிறான், மகன் கதாபாத்திரத்திற்கு செட் ஆக மாட்டான் என்று வெற்றிமாறனிடம் சொன்னேன். வேறு யாரையாவது நடிக்க வைங்க என்றேன். அதற்கு வெற்றி ‘கொஞ்சம் டைம் கொடுங்க தனுஷ் அவனை வெயிட் கம்மி பண்ணிட்டு வரச்சொல்கிறேன்’ என்றார். ஓகே வெற்றி சார்’ன்னு சொல்லிட்டேன். அதுக்கு அப்பறம் நான் கென்னை பார்க்கவே இல்ல. நேரடியா ‘அசுரன்’ படத்தோட முதல் நாள் படப்பிடிப்பில தான் பார்த்தேன். முதல் ஷாட்டிலேயே அவன் நடிச்சதை பார்த்து இவன் கிட்ட ஏதோ ஒரு திறமை இருக்கு’ன்னு வெற்றி கிட்ட சொன்னேன். சின்ன பையனா இருக்கான், ஆனா எல்லார் முன்னாடியும் எந்தத் தயக்கமும் இல்லாம நல்லா நடிக்கிறான். சரியான தேர்வுதான் வெற்றி’ன்னு சொன்னேன். அதனால கென்னை கண்டுப்பிடிச்ச பெருமை முழுக்க முழுக்க வெற்றிமாறனுக்குத் தான். அவன் எனக்கு பப்ஜி ப்ரெண்ட். அவனுடன் எப்படியாவது க்ளோஸ் ஆக வேண்டும் என அவனுடன் விளையாடுவேன். அப்படிதான் அவன் என்னுடன் நெருக்கமானான்.

முன்பெல்லாம் நமக்கு முன்னால் வந்த நடிகர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள நினைப்போம். இப்போதெல்லாம் அடுத்து வரும் தலைமுறையினரைப் பார்த்து நேரத்தை வீணாக்கக் கூடாது என்பதை கற்க வேண்டும். இவர்களைப் பார்க்கும்போது நான் நிறைய நேரத்தை வீணாக்கிவிட்டேனோ எனத் தோன்றுகிறது. கென் என் மகன்தான். இந்த ’யூத்’ படம் மாபெரும் வெற்றியடைய வேண்டிக் கொள்கிறேன்” என்று கென் குறித்து தனுஷ் பேசியிருக்கிறார்.