LOADING

Type to search

இலங்கை அரசியல்

அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற மூன்று டிப்பர்கள் 24ம்திகதி சனி அன்றையதினம் மடக்கி பிடிக்கப்பட்டன

Share

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகாமையில் வைத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும், மூன்று டிப்பர்களுடன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.