LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்கா – ஈரான் போர்: காமேனியின் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Share

தங்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காததால், இஸ்ரேலுடன் சேர்ந்து கடந்த 28-ந்தேதி அந்த நாட்டை தாக்கியது. அமெரிக்கா. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஒரே நேரத்தில் இரு நாடுகளும் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அவரது மகள், மருமகன், பேரன் உள் ளிட்டோரும் இந்த கொடூர தாக்குதலில் பலியாகினர்.

இந்நிலையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் தெஹ்ரானில் நடத்திய வான்வழித் தாக்குதலில் படுகாயமடைந்த ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமேனியின் மனைவி மன்சௌரே கோஜஸ்தே பாகர்சாதே (79), கோமா நிலையில் இருந்த அவர், 2 நாட்களுக்கு பிறகு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சனிக்கிழமை காமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்ட அதே ஒருங்கிணைந்த தாக்குதலில் காயமடைந்தார். அவருக்கு வயது 78. காமேனிக்கும் மன்சூரே கொஜெஸ்தேக்கும் கடந்த 1964-ல் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. காமேனியின் படுகொலைக்கு பழி தீர்க்க இதுவரை இல்லாத அளவில் தீவிர பதிலடி தாக்குதலை தொடுப்போம் என்று ஈரான் சூளுரைத்துள்ளது.