அமெரிக்க அதிபர் டிரம்ப் 3 நாள் பயணமாக இங்கிலாந்து பயணம்
Share
அமெரிக்க அதிபர் டிரம்ப் 3 நாள் பயணமாக இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த பயணத்தில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமிலா மற்றும் இளவரசர் வில்லியம், இளவரசி மிடில்டன் ஆகியோரை டிரம்ப் சந்திக்கிறார். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் டிரம்ப் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் அமெரிக்கா-இங்கிலாந்து இடையே இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து-அமெரிக்க உறவு உலகிலேயே மிகவும் வலிமையானது என்று ஸ்டார்மரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.




















