LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு? – நார்வே தலைநகரில் பதற்றம்

Share

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையில், அயத்துல்லா அலி காமேனியின் கொலையை கண்டித்து பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குள் புகுந்து ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் சுமார் 10 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே நேற்று நள்ளிரவு பலத்த சத்தத்துடன் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆஸ்லோவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு காவல்துறை அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது.