LOADING

Type to search

சினிமா

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் வெளியீடு

Share

தமிழில் ‘மாஸ்டர்’, ‘கைதி’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். அதனை தொடர்ந்து ‘அநீதி’, ‘ரசவாதி’, ‘போர்’ போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது அர்ஜுன் தாஸ், நடிகை அதிதி ஷங்கர் உடன் இணைந்து ‘ஒன்ஸ் மோர்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். ‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். மேலும், பிரபல இசையமைப்பாளர் ஹேஷாம் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல்காட்சி பதாகை மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதனால் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில், ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் வெளியீடு குறித்து மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற கோடை காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.