LOADING

Type to search

இந்திய அரசியல்

ஆந்திரா: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 20 பேர் மரணம்

Share

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள வேட்டப்பாளையம் பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். சூர்யஸ்ரீ என்ற பெயரில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஆலையில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் முழுவதுமாக வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டாசு ஆலை விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை பட்டாசு வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.