LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஆரோக்கியமான ஆலோசனைகள் அடுத்த10 ஆண்டுக்குள் தீவகத்தை பொருளாதாரத்தில் கட்டியெழுப்பும் – MP ரஜீவன் சுட்டிக்காட்டு!

Share

ஆலோசனைகள் ஆரோக்கியமானதாக இருந்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தீவகத்தின் அபிவிருத்தியை அதன் இலக்கு நோக்கி முன்னகர்த்த முடியும் என்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தெரிவித்தார்.

24ம் திகதி புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில் வேலணை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில்
கூட்டம் ஆரம்பமான நிலையில் பிரதேசத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

இப்பிரதேச அபிவிருத்தி சார் ஆலோசனைகளில் தவிசாளர், பிரதேச சபையின் உறுப்பினர்களை நான் முன்னிலைப்படுத்தவே விரும்கின்றேன்.

ஏனெனில் அவர்களது ஒத்துழைப்பு இப்பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வு காணும் சக்தியாகவும் அவர்கள் இருக்கின்றனர்.

எனவே வேற்றுமைகள் புறக்கணிப்புக்கள், எமது பிரதேசத்தில் இருப்பதற்கோ உருவாகுவதற்கோ நான் இடமளிக்க மாட்டேன்.

அதன்படி இன்றைய கூட்டம் மிக ஆரோக்கியமானதாக இருந்தது.

மேலும் மக்களின் அபிவிருத்திகள் பேதமின்றி முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் வனவள மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய காணிக தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அதேபோன்று அராலிச் சந்திப் பகுதியில் பொலிஸ் நிலையம் ஒன்று அமைப்பதற்கான இடமும் அடையாளம் காணப்பட்டது என்றார்.