LOADING

Type to search

உலக அரசியல்

ஆஸ்திரேலியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு

Share

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேவ்ஸ் மாகாணத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடுகள், சாலைகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். கனமழை, வெள்ளத்தில் சிக்கிய பலரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை, வெள்ளத்தால் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, கனமழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.