இட்லி கடை படத்தில் சத்தியராஜ் கதாப்பாத்திர அறிமுக பதாகை
Share
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியீடு ஆகிறது.
படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவரே எழுதிப் பாடியுள்ள ‘எஞ்சாமி தந்தானே’ பாடலின் வரி காணொளி வெளியானது. படத்தின் கதாப்பாத்திர அறிமுக பதாகைகளை நேற்று மாலை முதல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, இப்படத்தில் அருண் விஜய் அஷ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக இட்லி கடை படக்குழு நேற்று பதாகை வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில், இட்லி கடை படத்தில் நடிகர் சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக பதாகை வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.




















