LOADING

Type to search

இலங்கை அரசியல்

இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் காசிநாத் செந்தில் அவர்கள் மன்னார் விஜயம்.

Share

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

(01-05-2025)

இந்தியாவின் தமிழ்நாடு திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான காசிநாத் செந்தில் 30ம் திகதி அன்றைய தினம் புதன்கிழமை மாலை மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

சிவில் சமூக செயல்பட்டாளர் ஒருவரின் ஏற்பாட்டில் பல்வேறு பொது அமைப்புக்கள், மீனவப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.

இந்த நிலையில் அன்றைய தினம் மாலை மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் மன்னார் பிரஜைகள் குழுவிற்கு விஜயம் மேற்கொண்டு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளாரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு விடையங்கள் குறித்து கலந்துரையாடப் பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.