LOADING

Type to search

உலக அரசியல்

இந்திய சரக்குக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல ஈரான் அனுமதி

Share

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, எரிவாயு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேறாது என ஈரான் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில், அமெரிக்க நாட்டிலிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக குஜராத் துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்த தாய்லாந்து நாட்டின் மயூரி நரேயி சரக்குக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், இந்தியக் கொடி ஏந்திய கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல ஈரான் அனுமதி அளித்ததாக தகவல் வெளியானது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சியுடன், அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்தியாவின் புஷ்பேக், பேரிமல் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பாகச் செல்வதாக தகவல் வெளியானது.