LOADING

Type to search

உலக அரசியல்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Share

இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. 62 ஆயிரம் பேர் வசிக்க கூடிய அபிபுரா நகரில் இருந்து 200 கி.மீ. தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்துள்ளது. நிலநடுக்கம் 70 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு வெளியிட்டு உள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கம் எதிரொலியாக ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்களும் உடனடியாக கிடைக்கப்பெறவில்லை.