LOADING

Type to search

உலக அரசியல்

இந்தோனேசியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 15 பேர் மரணம்

Share

ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் இருந்து ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகருக்கு நேற்று நள்ளிரவு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 34 பேர் பயணித்தனர். இந்நிலையில், ஜாவா தீவின் செமரங் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் பயணித்தனர். மேலும், 19 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.