இரண்டு தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கு காங்கிரஸ் தயார் – சித்தராமையா
Share
கர்நாடக மாநிலத்தில சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள பாகல்கோட் மற்றும் தாவணகரே தெற்கு ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இரண்டு தொகுதிகளும் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதியாகும். இரண்டு தொகுதி எம்.எல்.எ.-க்களும் உயிரிழந்த காரணத்தினால் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அடுத்த மாதம் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் இடைத்தேர்தலுக்கு தயார் என சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில் “இடைத்தேர்தலுக்கு தயாராகும் பணி முடிவடைந்துள்ளது. இடைத்தேர்தலுக்கு நாங்கள் தயார்” என்றார்.




















