இறுதிப்பக்கம் இயக்குநரின் புதிய திரைப்படத்தில் பதிவேற்றம்
Share
இறுதிப்பக்கம்’ மற்றும் ‘டியர் ரதி’ ஆகிய கவனிக்கத்தக்கத் திரைப்படங்களைத் தொடர்ந்து, இன்சோம்னியாக் ட்ரீம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது மூன்றாவது தயாரிப்பை (புரொடக்ஷன் நம்பர் 3) பிரம்மாண்டமான பூஜையுடன் தொடங்கியுள்ளது. முந்தைய படம் `இறுதிப்பக்கம்’ மூலம் ஒரு நேர்த்தியான மர்டர் மிஸ்டரியைக் கொடுத்த இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் திரில்லர் பாணிக்கே திரும்பியுள்ளார். ஆனால், இது வழக்கமான பாணியில் அமையாமல், தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய தளத்தில், ரசிகர்களுக்கு முற்றிலும் புதுவிதமான அனுபவத்தைத் தரும் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் `குமார சம்பவம்’ புகழ் குமரன் தங்கராஜன், ஸ்மேகா, ராஜேஷ் பாலசந்திரன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், அபிஷேக் ஜோசப் சத்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். முழுக்க முழுக்க எமோஷனல் மற்றும் விறுவிறுப்பு நிறைந்த திரைக்கதையைக் கொண்ட இந்தப் படத்தின் திரைக்கதை, திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சுற்றியே நகர்கிறது. எதார்த்தமான சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் அந்தப் பகுதிகளிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் பாண்டியன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் பங்கேற்கவுள்ள மற்ற நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் பிற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.




















