LOADING

Type to search

இலங்கை அரசியல்

இறுதிப் போரில் தவைவர் பிரபாகரன் தப்பி ஓட விரும்பவில்லை என்கறார் சபா குகதாஸ் !

Share

அண்மையில் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர சிங்கள ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சர்வதேசம் காப்பாற்ற முடியாது போனமையால் தான் இலங்கை மீது போர்க் குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதாக சாடியுள்ளார்.

வேடிக்கையான ஒரு மடைமாற்றுக் கதையை சிங்கள மக்களுக்கு கட்டவிழ்த்து விட்டுள்ளார் வீரசேகர என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தனது அறிக்கையில் தெரிவிக்கையில்,

இறுதிப் போர் நடக்கும் போது தலைவர் பிரபாகரன் அவர்கள் குடும்பமாக பாதுகாப்பாக வெளியேறிச் செல்லக் கூடிய சூழ்நிலைகள் இருந்தும் அதனை அவர் ஒரு போதும் விரும்பவில்லை.

அத்துடன் கடற்புலிகளின் நீர்மூழ்கிப் பிரிவானது நீர்மூழ்கிக் கப்பலில் அவர்களைக் கொண்டு செல்ல பல தடவை முயற்சித்தனர் தலைமைச் செயலக போராளிகள் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டனர் போரின் இறுதி வாரத்தில் குறிப்பாக மே 02 திகதியில் இருந்து நந்திக்கடல் பகுதியின் ஊடாக தளபதி சிறிராம் அவர்கள் தலைவரை வெளி கொண்டு செல்ல புளூஸ்ரார் படகுகள் அதற்கான வெளி இணைப்பு இயந்திரங்கள் எரிபொருள் போன்ற ஏற்பாட்டுடன் பல முயற்சிகளை மேற் கொண்டார் இவையாவும் தலைவரால் நிராகரிக்கப்பட்டன.

வெளிநாடுகளில் இருந்து பல்வேறு முயற்சிகளை தமிழ் பல அமைப்புக்கள் முயற்சிகளை எடுத்தன. அது தொடர்பான செய்திகள் அக் காலத்தில் வெளிவந்தன.

இவை அனைத்தையும் நிராகரித்து தனது தாய் தந்தையரை பொது மக்களுடன் செல்ல அனுமதித்துடன் தன்னுடைய மூத்த மகன் மகளை களத்தில் நின்று போரிடச் சொன்னார் இளைய மகனை பாலச்சந்திரனை மகனின் விருப்பப்படி போராளிகளிடம் ஒப்படைத்தார்.

குடும்பமாக பாதுகாப்பாக அவரை வெளியேற்ற நூற்றுக்கணக்கான போராளிகள் தயாராக இருந்தும் அவற்றை நிராகரித்து இறுதி வரை களத்தில் நின்ற மண்டியிடாத வீரத் தலைவன்.

போர்க்குற்றம் அல்ல இனப்படுகொலை தான் இறுதிப்போரில் நடந்து அதனை மறைக்க மடைமாற்று வேலையை மேற் கொள்கிறார் சரத் வீரசேகர என அவர் தெரிவித்துள்ளார்.