இலங்கை மலையகத்தில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மொன்றியால் திருமுருகன் ஆலய நிர்வாக சபையினர் வழங்கிய 20 லட்சம் ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்கள்
Share
கனடா மொன்றியால் அருள்மிகு திருமுருகன் ஆலய நிர்வாக சபையினரின் மனமுவந்த நிதி அன்பளிப்பில் இலங்கையின் மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தின் ராகலைப் பகுதியில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பெற்ற உலர் உணவு அடங்கிய பொதிகள் அண்மையில் வழங்கப்பெற்றன.
அண்மையில் இலங்கையின் அனைத்துப் பகுதியிலும் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் காரணமாக அங்குள்ளவர்களுக்கு உதவிகள் தேவை என்பதை அறிந்த கனடா மொன்றியால் அருள்மிகு திருமுருகன் ஆலய நிர்வாக சபையினர் தகுந்த அமைப்புக்கள் மற்றும் சேவையாளர்களை அணுகிய போது திருவாளர்கள் பிரதீபன் மகேந்திரன் மற்றும் மனோஜ் ராஜகோபால் மற்றும் அவர்களது குழுவினர் இந்த பணிக்கு ஏற்றவர்கள் என்பதை அறிந்து கொண்டார்கள்.
பின்னர் இலங்கையின் மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தின் ராகலைப் பகுதியில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று தேயிலைத் தோட்டங்களின் முகாமையாளர்கள் விடுத்த வேண்டுகோளின் பேரில் அவர்களது மேற்பார்வையில் தொழிலாளர்களுக்கு உலர் உணவு அடங்கிய பொதிகள் அண்மையில் வழங்கப்பெற்றன.
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்


























