LOADING

Type to search

உலக அரசியல்

இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது – ஈரான் தலைவர் காமேனி

Share

மத்திய கிழக்கில் ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.ஆனால் தங்கள் அணு ஆயுத திட்டம் அனைத்தும் அமைதி நோக்கத்துக்கானவை என ஈரான் கண்டிப்பாக கூறி வருகிறது. எனினும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் இஸ்ரேல் தலைவர்கள் இதை நம்ப தயாரில்லை. ஈரானால் உடனடியாக அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என கருதுகின்றனர். எனவே ஈரானை அணு ஆயுதம் எதுவும் தயாரிக்காமல் பேச்சுவார்த்தை மூலம் தடுத்து நிறுத்த அமெரிக்கா திட்டமிட்டது. இதற்காக பேச்சுவார்த்தைகளும் நடந்தன. அதேநேரம் ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களின் இருத்தலுக்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி இஸ்ரேல் கடந்த 13-ந் தேதி திடீரென ஈரான் மீது தாக்குதல் தொடுத்தது. இஸ்ரேலின் இந்த அதிரடிக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் இஸ்ரேலை திக்குமுக்காடச்செய்து வருகிறது.கடந்த 10 நாட்களாக நடந்து வரும் இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் நீடித்து வருகிறது. எனினும் அமெரிக்கா தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் பயங்கர தாக்குதலை நடத்தியது. 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி செலுத்தியதாக ஈரானின் புரட்சிகர படை தெரிவித்தது. இதில் குழந்தைகள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. டெல் அவிவ் நகரில் பலமாடி கட்டிடம் ஒன்றும், ஏராளமான வீடுகளும் சேதமடைந்துள்ளன.மறுபுறம் ஈரான் மீது இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் 2 எப்-5 ரக விமானங்களை அழித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. மேலும் இஸ்பகான் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் உள்பட பல இடங்களிலும் தாக்குதல் நடத்தியது.இரு நாடுகளுக்கு இடையே 10 நாட்களாக நடந்து வரும் தாக்குதலால் உயிரிழப்பு அதிகரித்து உள்ளது. அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. தவறுக்கான தண்டனை தொடரும். எதிரி கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர். அதற்கு நேரம் வந்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.